திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 53

பாயிரம்வேதச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

இருக்குரு வாம்எழில் வேதத்தின் உள்ளேஉருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கிவெருக்குரு வாகிய வேதியர் சொல்லும்கருக்குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

உரை

சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவனும், உணர்ந்து வேதத்தைச் சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும், வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும், அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளுபவனும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.

வரி வாரியாக

  • வரி 1

    சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவன் அவன்.

  • வரி 2

    உணர்ந்து வேதத்தைச் சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும் அவனே.

  • வரி 3

    வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும் அவனே இருக்கிறான்.

  • வரி 4

    அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.

திருமந்திரம் பாடல் #53

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout