திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 20

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தஅடிகள் உறையும் அறநெறி நாடில்இடியும் முழக்கமும் ஈசர் உருவம்கடிமலர்க் குன்றம் மலையது தானே.

உரை

படைப்புகள் அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் எப்போது என்று முன்னரே தீர்மானித்து, அதன்படி படைத்தருள்பவன் இறைவன். தன்னை வணங்கி வழிபடும் அடியவருக்கே அடியவனாகவும் இருப்பவன் அவன். அவனுடைய தன்மையை உணர்த்தும் அறமும் நெறியும் எவை என்று தேடினால், அவை வேதங்களே. அவனுடைய உருவம் எப்படிப்பட்டது என்று தேடினால், இடி முழங்கும்போது வானில் தோன்றும் மின்னல் ஒளியும் அவன் உருவமே; அப்போது கேட்கும் இடி ஓசையும் அவன் உருவமே. இப்படி அனைத்தையும் தன் உருவமாகக் கொண்ட இறைவனின் இருப்பிடம் எது என்று தேடினால், நறுமண மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த குன்றுகள் அனைத்தும் அவன் இருப்பிடமே; அக்குன்றுகள் அமைந்த மாபெரும் மலைகளும் அவன் இருப்பிடமே.

வரி வாரியாக

  • வரி 1

    படைப்புகள் அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் எப்போது என்று முன்னரே தீர்மானித்து, அதன்படி படைத்தருள்பவன் இறைவன்.

  • வரி 2

    தன்னை வணங்கி வழிபடும் அடியவருக்கே அடியவனாகவும் இருப்பவன் அவன். அவனுடைய தன்மையை உணர்த்தும் அறமும் நெறியும் வேதங்களே.

  • வரி 3

    இடி முழங்கும்போது வானில் தோன்றும் மின்னல் ஒளியும், அப்போது கேட்கும் இடி ஓசையும் அவன் உருவமே.

  • வரி 4

    நறுமண மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த குன்றுகள் அனைத்தும், அக்குன்றுகள் அமைந்த மாபெரும் மலைகளும் அவன் இருப்பிடமே.

திருமந்திரம் பாடல் #20

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout