திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

உரை

இறைவன் ஒருவனே; அவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை. உலகில் உள்ள தெய்வங்கள் அனைத்தும், அண்டசராசரங்களும், அவற்றுள் உள்ள அனைத்தும் அந்த ஒரே இறைவனாகவே இருக்கின்றன.

ஒன்றாய் இருக்கும் இறைவனின் அருள் இரண்டாய் இருக்கின்றது. அசையா சக்தியாகிய இறைவனிடமிருந்து அவனுடைய அருள் அசையும் சக்தியாக வெளிப்படுகிறது. கசப்பான மருந்தும் இனிப்பான மருந்தும் நோயைக் குணப்படுத்துவது போலவே, இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் இறைவனின் அருளாகும்.

இரண்டாய் இருக்கும் இறைவனே பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களாகவும் நின்று, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுவிதமான தொழில்களையும் புரிகின்றான்.

மூன்றாய் நின்ற இறைவனே, உயிர்கள் தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மாபெரும் கருணையால், ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு விதமான வேதங்களாகவும் நிற்கின்றான்.

நான்கு வேதங்களாக இருக்கும் இறைவனே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களாகவும் இருக்கின்றான். படைத்தல், காத்தல், மாயையால் மறைத்தல், அருளல், மாயையை அழித்தல் ஆகிய ஐந்து வகைத் தொழில்களுக்கும் தலைவன் அவன் ஒருவனே.

ஐம்பூதங்களாக இருக்கும் இறைவனே, உயிர்களின் உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தம், ஆஞ்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக விரிந்து இருக்கின்றான்.

ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கும் இறைவனே, மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக இருந்து, யோகங்கள் புரிவதன் மூலம் ஆறு சக்கரங்களுக்கும் மேலேறி, ஏழாவதாகிய சகஸ்ரதளத்திற்குச் சென்று, அதையும் தாண்டிப் பரவெளியில் உறைந்திருக்கின்றான்.

ஏழு சக்கரங்களிலும் உறைந்திருக்கும் இறைவனைத் தனக்குள்ளேயே உணர்ந்து, உயிர்கள் அவனை எட்டுதலே முக்தியாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஒன்று: இறைவன் ஒருவனே; அவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை. உலகில் உள்ள தெய்வங்கள் அனைத்தும், அண்டசராசரங்களும் அந்த ஒரே இறைவனாகவே இருக்கின்றன. இரண்டு: ஒன்றாய் இருக்கும் அவனுடைய அருள் இரண்டாய் இருக்கின்றது. அசையா சக்தியாகிய இறைவனிடமிருந்து அவன் அருள் அசையும் சக்தியாக வெளிப்படுகிறது. கசப்பான மருந்தும் இனிப்பான மருந்தும் நோயைக் குணப்படுத்துவது போலவே, இன்பம் துன்பம் இரண்டும் இறைவனின் அருளாகும்.

  • வரி 2

    மூன்று: இரண்டாய் இருக்கும் இறைவனே பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களாகவும் நின்று, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் புரிகின்றான். நான்கு: உயிர்கள் தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மாபெரும் கருணையால், ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களாகவும் நிற்கின்றான். ஐந்து: நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களாகவும் இருக்கின்றான்; படைத்தல், காத்தல், மாயையால் மறைத்தல், அருளல், மாயையை அழித்தல் ஆகிய ஐந்து தொழில்களுக்கும் தலைவன் அவனே.

  • வரி 3

    ஆறு: ஐம்பூதங்களாக இருக்கும் இறைவனே, உயிர்களின் உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தம், ஆஞ்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக விரிந்து இருக்கின்றான். ஏழு: மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக இருந்து, யோகங்கள் புரிவதன் மூலம் ஆறு சக்கரங்களுக்கும் மேலேறி, ஏழாவதாகிய சகஸ்ரதளத்திற்குச் சென்று, அதையும் தாண்டிப் பரவெளியில் உறைந்திருக்கின்றான்.

  • வரி 4

    எட்டு: ஏழு சக்கரங்களிலும் உறைந்திருக்கும் இறைவனைத் தனக்குள்ளேயே உணர்ந்து, உயிர்கள் அவனை எட்டுதலே முக்தியாகும்.

முருகா பாடல்

1 / 3

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout