திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 0

பாயிரம்0. கடவுள் வணக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்து விளம்பிறை போலு மெயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தி யில்வைத் தடிபோற்றுகின் றேனே.

உரை

ஐந்து கரங்களையே ஐந்து பூதங்களாக (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) கொண்டவனும், உலகத்தையே தனது திருமுகமாகக் கொண்டவனும், இளம் பிறை நிலாவைப் போன்ற கூர்மையான கொம்புகளை உடையவனும், குருவாக இருக்கின்ற இறைவனின் மகனாக இறைத் தன்மையாகவே இருப்பவனும், உண்மை ஞானத்தின் உச்சமாகவும் இருப்பவனை, எமது அறிவுக்கு உள்ளே வைத்து, அவனது திருவடிகளை யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்.

வரி வாரியாக

  • வரி 1

    ஐந்து (ஐந்து) கரத்து (கரங்களே) அனை (ஐந்து பூதங்களாக உடையவனும்) யா (உலகம்) அனை (போன்ற) முகத்து (திருமுகமே) அனை (உலகமாக உடையவனும்)

  • வரி 2

    இந்து (நிலவின்) இளம் (வளரும்) பிறை (பிறை) போலும் (போன்ற) எயிற்று (கொம்புகளை) அனை (கூர்மையாக உடையவனும்)

  • வரி 3

    நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) மகன் (மகனாக) தனை (இறை தன்மையாகவே இருப்பவனை) ஞான (உண்மை ஞானத்தின்) கொழுந்தினை (உச்சமாகவும் இருப்பவனை)

  • வரி 4

    புந்தி (எமது அறிவுக்கு) இல் (உள்ளே) வைத்து (வைத்து) அடி (அவனது திருவடிகளை) போற்றுகின்றேனே (யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்).

முருகா பாடல்

1 / 3

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout