திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 43

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

அரனடி சொல்லி அரற்றி அழுதுபரனடி நாடியே பாவிப்ப நாளும்உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்குநிரனடி செய்து நிறைந்துநின் றானே.

உரை

இறைவன் திருவடியை நினைத்து அவன் நாமத்தைக் கூறி, அன்பால் கசிந்துருகி அழுது, ஆராய்ந்து தெளிந்து, இறைவன் திருவடியை நாள்தோறும் உறுதியான உள்ளத்தோடு தியானித்து, அந்த உணர்விலேயே இலயித்திருப்பவர்களுக்கு, திருவடிப் பேற்றை அருளி, இறைவன் அவர்களுடன் நிறைந்திருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவன் திருவடியை நினைத்து அவன் நாமத்தைக் கூறி, அன்பால் கசிந்துருகி அழுது,

  • வரி 2

    ஆராய்ந்து தெளிந்து, இறைவன் திருவடியை நாள்தோறும் தியானித்து,

  • வரி 3

    உறுதியான உள்ளத்தோடு அந்த உணர்விலேயே இலயித்திருப்பவர்களுக்கு,

  • வரி 4

    திருவடிப் பேற்றை அருளி, இறைவன் அவர்களுடன் நிறைந்திருப்பான்.

திருமந்திரம் பாடல் #43

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout