திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 45

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லைதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

உரை

இவ்வுலகம் கர்ம விதிப்படியே இயங்குகிறதே அன்றி வேறு வழியில்லை. உயிர்கள் பெறும் இன்பமும் துன்பமும் அவரவர் கர்ம விதிப்படியே அமையுமேயன்றி மாறுவதில்லை. இருப்பினும், முக்தியடைய வேண்டுமென்ற எண்ணத்தில் இறைவனை நாள்தோறும் வணங்கித் துதிக்கும் உயிர்களின் கர்ம விதிகளை அகற்ற, சூரியனைப் போல் ஒளியாய் வந்து, முக்தி பெறும் வழியைக் காட்டி அருள்வான் இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    இவ்வுலகம் கர்ம விதிப்படியே இயங்குகிறதே அன்றி வேறு வழியில்லை.

  • வரி 2

    உயிர்கள் பெறும் இன்பமும் துன்பமும் அவரவர் கர்ம விதிப்படியே அமையுமேயன்றி மாறுவதில்லை.

  • வரி 3

    இருப்பினும், முக்தியடைய வேண்டுமென்ற எண்ணத்தில் இறைவனை நாள்தோறும் வணங்கித் துதிக்கும் உயிர்களின்,

  • வரி 4

    கர்ம விதிகளை அகற்ற, சூரியனைப் போல் ஒளியாய் வந்து, முக்தி பெறும் வழியைக் காட்டி அருள்வான் இறைவன்.

திருமந்திரம் பாடல் #45

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout