திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 38

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

உரை

அனைத்தையும்விடப் பெரியவனும், கிடைப்பதற்கு மிகவும் அரியவனும், பிறவியே இல்லாமல் உருவானவனும், நந்தி என்ற பெயரில் எமக்குள் குருவாக வந்திருப்பவனும், பெருமை மிக்க தவத்தின் பலனாகக் கிடைப்பவனுமான சதாசிவமூர்த்தியின் மேல் யான் கொண்ட தீராத அன்பினால், அவனுடைய பெருமைகளையும் புகழ்களையும் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்தையும்விடப் பெரியவனும், கிடைப்பதற்கு மிகவும் அரியவனுமான அவனைப் புகழாமல் இருக்கமாட்டேன்.

  • வரி 2

    பிறவியே இல்லாமல் உருவானவனை நான் புகழாமல் இருக்கமாட்டேன்.

  • வரி 3

    நந்தி என்ற பெயரில் எமக்குள் குருவாக வந்திருக்கும் எங்கள் பேரருளாளனைப் புகழாமல் இருக்கமாட்டேன்.

  • வரி 4

    பெருமை மிக்க தவத்தின் பலனாகக் கிடைத்த அவனைப் புகழாமல் யான் இருக்கமாட்டேன்.

திருமந்திரம் பாடல் #38

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout