திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 39

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனைஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்ஆத்தம்செய் தீசன் அருள்பெற லாமே.

உரை

இறைவனின் எல்லையற்ற குணங்களை உணர்ந்து புகழ்ந்து போற்றக்கூடியவர்களின் மனத்துள் ஜோதியாகப் பரவி இருப்பவனும், அடியவர் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு அங்கே பெருமகிழ்வோடு வீற்றிருக்கும் தூயவனுமான சதாசிவமூர்த்தியை, போற்றியும் புகழ்ந்தும், 'எம்பெருமான்' என்று உரக்க அவன் நாமத்தைக் கூறியும், உண்மையான அன்போடு இருந்தால், அவனுடைய அருளைப் பெறலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனின் எல்லையற்ற குணங்களை உணர்ந்து புகழ்ந்து போற்றக்கூடியவர்களின் மனத்துள் ஜோதியாகப் பரவி இருப்பவன் அவன்.

  • வரி 2

    அடியவர் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு, அங்கே பெருமகிழ்வோடு வீற்றிருக்கும் தூயவனும் தேவனும் அவனே.

  • வரி 3

    அவனைப் போற்றியும் புகழ்ந்தும், 'எம்பெருமான்' என்று உரக்க அவன் நாமத்தைக் கூறியும்,

  • வரி 4

    உண்மையான அன்போடு இருந்தால், ஈசனுடைய அருளைப் பெறலாம்.

திருமந்திரம் பாடல் #39

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout