திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 32

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்மேவு பிரான்விரி நீர்உல கேழையும்தாவு பிரான்தன்மை தானறி வார்இல்லைபாவு பிரான்அருள் பாடலும் ஆமே.

உரை

தேவர்களுக்கெல்லாம் தலைவனாகத் தேவர்களோடு கலந்திருப்பவனும், நமக்கும் தலைவனாக நம்மோடு கலந்திருப்பவனும், பத்துத் திசைகளிலும் (எட்டுத் திசைகளும், ஆகாயமும் பூமியும்) பரவியிருப்பவனும், பெருங்கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் தாண்டி நிற்பவனுமான சதாசிவமூர்த்தியின் தன்மை என்னவென்று யாரும் அறிந்துகொள்ளவில்லை. எங்கும் எதிலும் பரந்து நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளின் அருளைப் பற்றியே யாம் பாடுகின்றோம்.

வரி வாரியாக

  • வரி 1

    தேவர்களுக்கெல்லாம் தலைவனாகத் தேவர்களோடு கலந்திருப்பவனும், நமக்கும் தலைவனாக நம்மோடு கலந்திருப்பவனும் அவனே.

  • வரி 2

    பத்துத் திசைகளிலும் (எட்டுத் திசைகளும், ஆகாயமும் பூமியும்) பரவியிருப்பவனும், பெருங்கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் தாண்டி நிற்பவனும் அவனே.

  • வரி 3

    இத்தகைய பரம்பொருளின் தன்மை என்னவென்று யாரும் அறிந்துகொள்ளவில்லை.

  • வரி 4

    எங்கும் எதிலும் பரந்து நிறைந்திருக்கும் அவனுடைய அருளைப் பற்றியே யாம் பாடுகின்றோம்.

திருமந்திரம் பாடல் #32

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout