திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 41

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

சினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்புனம்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்குக்கனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கேஇனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

உரை

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து சீறி எழுந்த ஆலகால விஷத்தை, யாரையும் தீண்டாதவாறு தாமே அருந்தி அனைவரையும் காத்த தேவர்களின் தலைவன் அவன். அவ்விஷம் உள்ளே இறங்கிவிடாமல் கழுத்திலேயே தடுத்து நிறுத்திய, பேரொளி வீசும் நெற்றியை உடைய உமையம்மையாரைத் தன் உடலின் சரிபாதியாகக் கொண்ட சதாசிவமூர்த்தி, தம் குறைகளைத் தாண்டிய உறுதியோடு நெறிவழியில் செல்ல, இறைவனைத் தம் நெஞ்சத்திற்குள் வைத்துப் பூஜிக்கக்கூடியவர்களுடன், பெண் மானைச் சேர்ந்த ஆண் மான் போல எப்போதும் பிரியாது இணைந்து நிற்கின்றான்.

உண்மைப் பொருளான இறைவனை அடையும் ஆசையில், அவனை நெஞ்சில் வைத்துப் போற்றிப் புகழும் அடியவர்களின் நெஞ்சிலிருந்து, ஆணவம், அகங்காரம், கோபம் ஆகியவை அவர்களைப் பாதிக்காதவாறு தாமே எடுத்துக்கொண்டு, இறைவனை அடையவிடாமல் தடுக்கும் கர்மங்கள் அவர்கள் வழியில் குறுக்கிடாதபடி தடுத்து நிறுத்தி, அவர்கள் செல்லும் நேர்வழியில் அவர்களோடு இணைந்து நடந்து வந்து அவர்களைக் காத்தருள்வான் சதாசிவமூர்த்தி.

வரி வாரியாக

  • வரி 1

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தை, யாரையும் தீண்டாதவாறு தாமே அருந்தி அனைவரையும் காத்த தேவர்களின் தலைவன் அவன்.

  • வரி 2

    இறைவனைத் தம் நெஞ்சத்திற்குள் வைத்துப் போற்றிப் பூஜிக்கக்கூடியவர்களுடன் அவன் இணைந்து நிற்கிறான்; அவர்களின் நெஞ்சிலிருந்து ஆணவம், அகங்காரம், கோபம் ஆகியவற்றைத் தாமே எடுத்துக்கொள்கிறான்.

  • வரி 3

    அவ்விஷத்தைக் கழுத்திலேயே தடுத்து நிறுத்திய, பேரொளி வீசும் நெற்றியை உடைய உமையம்மையைத் தன் உடலின் சரிபாதியாகக் கொண்டவன் அவன்.

  • வரி 4

    தம் குறைகளைத் தாண்டி நேர்வழியில் செல்பவர்களுடன், பெண் மானைச் சேர்ந்த ஆண் மான் போல எப்போதும் பிரியாது இணைந்து நடந்து வருகிறான்.

திருமந்திரம் பாடல் #41

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout