திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 30

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்ஆனின் றழைக்கும் அதுபோல்என் நந்தியைநானின் றழைப்பது ஞானம் கருதியே.

உரை

வானத்திலிருந்து பெய்யும் மழை, வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் அனைவர் மேலும் பொதுவாகப் பெய்கிறது. அதுபோலவே, இறைவனின் அருளும் வேண்டியவர் வேண்டாதவர் என்றின்றி அனைவருக்கும் கிடைக்கும் என்று எண்ணி, இறைவனை நாடிச் செல்ல சிலர் தயங்குவார்கள். ஆனால், கன்று தன் பசியைத் தாய்ப்பசுவை நோக்கிக் கதறித் தெரிவிப்பதைப் போலவே, குருவாகிய சதாசிவமூர்த்தியை நான் இன்று வேண்டி அழைப்பது, எனது ஞானப் பசியை அவர் தீர்க்க வேண்டும் என்ற வேண்டுதலால்தான்.

வரி வாரியாக

  • வரி 1

    வானத்திலிருந்து பெய்யும் மழை வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் அனைவர் மேலும் பொதுவாகப் பெய்வதைப் போல, இறைவனும் அருள்கிறான்.

  • வரி 2

    அது இன்று தமக்குக் கிடைக்குமா என்று சிலர் தயங்கி, இறைவனை நாடிச் செல்லாமல் இருப்பார்கள்.

  • வரி 3

    கன்று தன் பசியைத் தாய்ப்பசுவை நோக்கிக் கதறித் தெரிவிப்பதைப் போல, என் நந்தியை,

  • வரி 4

    நான் இன்று வேண்டி அழைப்பது, எனது ஞானப் பசியை அவர் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே.

திருமந்திரம் பாடல் #30

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout