திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 26

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்கடந்துநின் றான்கம லம்மலர் மேலேபுணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.

உரை

அனைத்து உயிர்களையும் விட்டு நீங்காமல் அவர்களுடனேயே எப்போதும் நிற்கும் இறைவனை நாள்தோறும் வணங்குங்கள். அவ்வாறு வணங்கி வந்தால், உலகமும் அண்டசராசரங்கள் முழுவதும் படர்ந்து விரிந்திருப்பவனும், அவற்றையும் தாண்டி நிற்பவனும், உயிர்களின் தலையுச்சியிலிருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தின் ஆயிரம் தாமரை இதழ்களில் வசிப்பவனுமான சதாசிவமூர்த்தியுடன் கலந்து, அவன் திருவடியை எப்போதும் காணும் புண்ணியத்தை அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உயிர்களையும் விட்டு நீங்காமல் அவர்களுடனேயே எப்போதும் நிற்கும் இறைவனை நாள்தோறும் வணங்குங்கள்.

  • வரி 2

    அவ்வாறு வணங்கி வந்தால், உலகமும் அண்டசராசரங்கள் முழுவதும் படர்ந்து விரிந்திருப்பவனான சதாசிவமூர்த்தியை அடையலாம்.

  • வரி 3

    அவற்றையும் தாண்டி நிற்பவனும், உயிர்களின் தலையுச்சியிலிருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தின் ஆயிரம் தாமரை இதழ்களில் வசிப்பவனும் அவனே.

  • வரி 4

    அவனுடன் கலந்து, அவன் திருவடியை எப்போதும் காணும் புண்ணியத்தை அடையலாம்.

திருமந்திரம் பாடல் #26

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout