திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 28

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்உணங்கிநின் றான்அம ராபதி நாதன்வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

உரை

அனைத்து உயிர்களுடனும் எங்கும் எதிலும் கலந்திருப்பவனும், உலக வழக்கங்களுக்கு மாறுபட்டு நிற்பவனும், அனைத்திற்கும் தொடக்கமாகவும் முடிவாகவும் இருப்பவனும், தேவர்கள் அனைவருக்கும் தலைவனாகிய இந்திரனுக்கும் தலைவனாக இருப்பவனுமான சதாசிவமூர்த்தி, தன்னை உண்மையான பக்தியோடு வணங்கி நிற்பவர்கள் செல்லும் வழிகளிலெல்லாம் அவர்களைப் பாதுகாத்துத் துணையாக வருகிறான்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உயிர்களுடனும் எங்கும் எதிலும் கலந்திருப்பவன் அவன்.

  • வரி 2

    உலக வழக்கங்களுக்கு மாறுபட்டு நிற்பவனும், அனைத்திற்கும் தொடக்கமாகவும் முடிவாகவும் இருப்பவனும் அவனே.

  • வரி 3

    தேவர்கள் அனைவருக்கும் தலைவனாகிய இந்திரனுக்கும் தலைவனாக இருப்பவன் அவன்.

  • வரி 4

    தன்னை உண்மையான பக்தியோடு வணங்கி நிற்பவர்கள் செல்லும் வழிகளிலெல்லாம் அவர்களைப் பாதுகாத்துத் துணையாக வருகிறான்.

திருமந்திரம் பாடல் #28

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout