திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 47

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்பனையுள் இருந்த பருந்தது போலநினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே.

உரை

கர்மவினைப் பயனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே எப்போதும் இறைவன் சிந்தனையில் இருப்பவர்கள், மாபெரும் தவம் செய்பவர்களுக்கு ஈடானவர்கள். இறைவனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பவர்கள் அவனுடைய பேரன்பிலேயே எப்போதும் நிற்பார்கள். பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பருந்து, அம்மரத்தின் பலன்களை அனுபவிக்காமல் வெளியில் உணவு தேடி அலைவதைப் போல, இறைவன் அருகிலேயே இருந்தும் அவனை நினைக்காதவர்களுக்குப் பேரின்பம் ஒருபோதும் கிடைப்பதில்லை.

வரி வாரியாக

  • வரி 1

    கர்மவினைப் பயனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே எப்போதும் இறைவன் சிந்தனையில் இருப்பவர்கள், மாபெரும் தவம் செய்பவர்களுக்கு ஈடானவர்கள்.

  • வரி 2

    இறைவனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பவர்கள் அவனுடைய பேரன்பிலேயே எப்போதும் நிற்பார்கள்.

  • வரி 3

    பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பருந்து, அம்மரத்தின் பலன்களை அனுபவிக்காமல் வெளியில் உணவு தேடி அலைவதைப் போல,

  • வரி 4

    இறைவன் அருகிலேயே இருந்தும் அவனை நினைக்காதவர்களுக்குப் பேரின்பம் ஒருபோதும் கிடைப்பதில்லை.

திருமந்திரம் பாடல் #47

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout