ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சாக்குகின் றான்அவன் ஆதிஎம் ஆருயிர்ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்தாக்குகின் றான்அவன் ஆவது அறிந்தே.
பாடல் 451 — உரைVerse 451 — meaning
உயிர்கள் இவ்வுலகில் பிறவி எடுப்பதற்கு முன், முந்தைய பிறவியில் தம்மைவிட்டுப் பிரிந்திருந்த இருபத்தைந்து தத்துவங்களை ஒன்றாகச் சேர்த்து, ஆதியாக இருக்கும் நமது ஆருயிரான இறைவன் அவற்றைக் கொண்டு உயிரை உருவாக்குகின்றான். உடலுடன் கூடிய அந்த உயிர் இவ்வுலகில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிந்து, கரு உருவாகும்போதே அதற்கு ஏற்றவாறு, கர்ப்பப் பையின் உள்ளிருந்தே உடலுடன் கூடிய உயிரை உருவாக்கி அருளுகின்றான் இறைவன்.
Before souls take birth in this world, he gathers together the twenty-five principles that had separated from them in their previous birth, and the God who is our own dear life, the primal one, forms the soul out of them. Knowing how that soul, joined to a body, must live in this world, and shaping it accordingly while the embryo itself is forming, the Lord, from within the womb itself, forms and grants the soul joined with a body.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்கள் இவ்வுலகில் பிறவி எடுப்பதற்கு முன், முந்தைய பிறவியில் தம்மைவிட்டுப் பிரிந்திருந்த இருபத்தைந்து தத்துவங்களை ஒன்றாகச் சேர்த்து,
Before souls take birth in this world, he gathers together the twenty-five principles that had separated from them in their previous birth,
- வரி 2Line 2
ஆதியாக இருக்கும் நமது ஆருயிரான இறைவன் அவற்றைக் கொண்டு உயிரை உருவாக்குகின்றான்.
and the God who is our own dear life, the primal one, forms the soul out of them.
- வரி 3Line 3
உடலுடன் கூடிய அந்த உயிர் இவ்வுலகில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிந்து, கரு உருவாகும்போதே அதற்கு ஏற்றவாறு,
Knowing how that soul, joined to a body, must live in this world, and shaping it accordingly while the embryo itself is forming,
- வரி 4Line 4
கர்ப்பப் பையின் உள்ளிருந்தே உடலுடன் கூடிய உயிரை உருவாக்கி அருளுகின்றான் இறைவன்.
the Lord, from within the womb itself, forms and grants the soul joined with a body.




