திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 454

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்புருடன் உடலில் பொருந்துமற் றோரார்திருவின் கருக்குழி தேடிப் புகுந்ததுருவம் இரண்டாய் ஓடி விழுந்ததே.

உரை

இருபத்தைந்து தத்துவங்களும் ஒன்றாகச் சேர்ந்து, ஆணும் பெண்ணும் சேரும்போது உருவாகும் கருமுட்டை கருவாக மாறி, அதுவே ஆண், பெண் என்கிற இரண்டுவித உருவங்களாகவும் மாறுகின்ற உண்மையை, பிறவி இல்லாத நிலையை அடைந்த ஞானிகள் கண்டு உணர்ந்திருக்கின்றார்களே தவிர, மற்றவர்கள் அறியவில்லை.

வரி வாரியாக

  • வரி 1

    இருபத்தைந்து தத்துவங்களும் ஒன்றாகச் சேர்ந்து,

  • வரி 2

    ஆணும் பெண்ணும் சேரும்போது உருவாகும் கருமுட்டை கருவாக மாறி,

  • வரி 3

    அதுவே ஆண், பெண் என்கிற இரண்டுவித உருவங்களாகவும் மாறுகின்ற உண்மையை,

  • வரி 4

    பிறவி இல்லாத நிலையை அடைந்த ஞானிகள் கண்டு உணர்ந்திருக்கின்றார்களே தவிர, மற்றவர்கள் அறியவில்லை.

திருமந்திரம் பாடல் #454

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout