திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 453

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

இன்புறு காலத் திருவர்முன் பூறியதுன்புறு பாசத் துயர்மனை வானுளன்பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்அன்புறு காலத்து அமைத்தொழிந் தானே.

உரை

ஆணும் பெண்ணும் சிற்றின்பத்தில் மகிழ்ந்து கூடுகின்ற போதே, அவர்களின் முன் ஜென்ம வினைகளாலும் புதிதாகப் பிறக்கும் உயிரின் முன் ஜென்ம வினைகளாலும், இவர்களுக்கு இந்த உயிர் பிறக்க வேண்டும் என்பதை இறைவன் முடிவு செய்கிறான். அந்த உயிரினால் பெற்றவர்களும், பெற்றவர்களால் அந்த உயிரும் அடையும் துன்பத்திற்குக் காரணமாக இருக்கும் பாசம் எனும் துயரமாகிய பந்தத்தால் அவர்களைக் கட்டி வைக்கின்றான். அந்த உயிர் இவ்வுலகில் எத்தனைக் காலம் வாழ வேண்டும் என்பதையும், அதன் பண்புகளையும், வாழ்க்கை முறையையும் முன்பே முடிவு செய்து, ஆணும் பெண்ணும் அன்பாகச் சேர்ந்த காலத்திலேயே, அதற்கு ஏற்றவாறு கருவை அமைத்து முடிக்கின்றான் இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆணும் பெண்ணும் சிற்றின்பத்தில் மகிழ்ந்து கூடுகின்ற போதே, அவர்களின் முன் ஜென்ம வினைகளாலும் புதிதாகப் பிறக்கும் உயிரின் முன் ஜென்ம வினைகளாலும், இவர்களுக்கு இந்த உயிர் பிறக்க வேண்டும் என்பதை இறைவன் முடிவு செய்கிறான்.

  • வரி 2

    அந்த உயிரினால் பெற்றவர்களும், பெற்றவர்களால் அந்த உயிரும் அடையும் துன்பத்திற்குக் காரணமாக இருக்கும் பாசம் எனும் துயரமாகிய பந்தத்தால் அவர்களைக் கட்டி வைக்கின்றான்.

  • வரி 3

    அந்த உயிர் இவ்வுலகில் எத்தனைக் காலம் வாழ வேண்டும் என்பதையும், அதன் பண்புகளையும், வாழ்க்கை முறையையும் முன்பே முடிவு செய்து,

  • வரி 4

    ஆணும் பெண்ணும் அன்பாகச் சேர்ந்த காலத்திலேயே, அதற்கு ஏற்றவாறு கருவை அமைத்து முடிக்கின்றான் இறைவன்.

திருமந்திரம் பாடல் #453

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout