தொடர்ந்து படிக்கread this section continuously
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்பொறைநின்ற இன்னுயிர் போந்துறை நாடப்பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.
உரைmeaning
தியானத்தின் மூலம் உயிர்கள் அறியக்கூடிய ஆறு ஆதார சக்கரங்களில் முதலாவதான மூலாதாரத்திற்கு மேல் இருக்கும் சுவாதிட்டான சக்கரத்தின் அருகே, மூச்சுக்காற்றின் வெப்பமும் பித்த நீரும் கலந்திருக்கும் கர்ப்பப் பைக்குள், செக்கச் சிவந்த சிறு கால்களோடு தலையையும் சேர்த்து உடலை வைத்திருக்கும் கருவை, உடலில் இருக்கும் வெப்பமும் நீரும் அதைச் சிதைத்துவிடாதபடி பொறுமையோடு உயிருக்கு உயிராய் உடனிருந்து காக்கும் இறைவன், அந்தக் கரு வெளியே போக வழி தேடும்போது இன்னும் வளர்ச்சி பெற்று முழுமையடைந்த பின்னரே வெளிவர வேண்டும் என்று அதற்கான தேவையாகப் பத்து மாதங்களைக் காலக்கெடுவாக வைத்து, அந்தக் காலக்கெடு முடியும்வரை கருவையும் காத்து, அதைத் தாங்கிக் கொண்டிருக்கும் தாய்க்கும் அதன் பாரம் பாதிக்காதபடி பாதுகாத்து அருளுகின்றான் இறைவன்.
Within the womb, near the Swadhishthana centre that lies above the Muladhara, the first of the six support-centres that souls can come to know through meditation, where the heat of the breath and the bile-fluid mingle, the embryo takes shape with its body, its small ruddy legs and its head joined. The Lord, patiently present as life to that life, guards it so that the heat and the fluid within the body do not destroy it. And when that embryo seeks a way to come forth, he sets ten months as the term it needs, so that it may come forth only after growing further and reaching completeness, and until that term is complete he guards the embryo and also protects the mother who bears it, so that its weight does not harm her, and grants this by his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தியானத்தின் மூலம் உயிர்கள் அறியக்கூடிய ஆறு ஆதார சக்கரங்களில் முதலாவதான மூலாதாரத்திற்கு மேல் இருக்கும் சுவாதிட்டான சக்கரத்தின் அருகே, மூச்சுக்காற்றின் வெப்பமும் பித்த நீரும் கலந்திருக்கும் கர்ப்பப் பைக்குள், செக்கச் சிவந்த சிறு கால்களோடு தலையையும் சேர்த்து உடலை வைத்திருக்கும் கருவை,
Within the womb, near the Swadhishthana centre that lies above the Muladhara, the first of the six support-centres that souls can come to know through meditation, where the heat of the breath and the bile-fluid mingle, the embryo takes shape with its body, its small ruddy legs and its head joined,
- வரி 2Line 2
உடலில் இருக்கும் வெப்பமும் நீரும் அதைச் சிதைத்துவிடாதபடி பொறுமையோடு உயிருக்கு உயிராய் உடனிருந்து காக்கும் இறைவன்,
and the Lord, patiently present as life to that life, guards it so that the heat and the fluid within the body do not destroy it,
- வரி 3Line 3
அந்தக் கரு வெளியே போக வழி தேடும்போது இன்னும் வளர்ச்சி பெற்று முழுமையடைந்த பின்னரே வெளிவர வேண்டும் என்று அதற்கான தேவையாகப் பத்து மாதங்களைக் காலக்கெடுவாக வைத்து,
and when that embryo seeks a way to come forth, he sets ten months as the term it needs, so that it may come forth only after growing further and reaching completeness,
- வரி 4Line 4
அந்தக் காலக்கெடு முடியும்வரை கருவையும் காத்து, அதைத் தாங்கிக் கொண்டிருக்கும் தாய்க்கும் அதன் பாரம் பாதிக்காதபடி பாதுகாத்து அருளுகின்றான் இறைவன்.
and until that term is complete he guards the embryo and also protects the mother who bears it, so that its weight does not harm her, and grants this by his grace.
திருமந்திரம் பாடல் #452





