தொடர்ந்து படிக்கread this section continuously
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனிஒழிந்த முதலைந்தும் ஈரைந்தோ டேறிப்பொழிந்து புனல்பூதம் போற்றுங் கரணம்ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.
உரைmeaning
ஆணும் பெண்ணும் சேர்ந்த போது, இருபத்தைந்து தத்துவங்களில் ஐந்து புலன்களைத் தவிர்த்து, ஆணிடமிருந்து ஐந்து ஞானேந்திரியங்களும் ஐந்து கன்மேந்திரியங்களும் சேர்ந்து, பெண்ணின் கருப்பைக்குள் பனிக்குடம் போன்ற நீரில் உருவான கருமுட்டைக்குள், ஐந்து பூதங்களும் நான்கு அந்தக்கரணங்களும் சேர்ந்து கருவாகின்றது. அதன்பின் உருவம் பெறும்போது ஐந்து புலன்களும் சேர்ந்துவிட, மீதி இருக்கும் புருடன் மட்டும் அந்தக் கருவுடம்பின் நெற்றி உச்சியின் உள்ளே சென்று ஒளிந்துகொண்டது.
When man and woman unite, of the twenty-five principles, leaving aside the five senses, the five organs of knowledge and the five organs of action come from the man, and within the egg that has formed in the fluid like a dewdrop within the woman's womb, the five elements and the four inner faculties join to become the embryo. After that, when it takes shape and the five senses join it as well, the remaining Purusha alone goes and hides itself within the crown of the forehead of that embryo's body.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆணும் பெண்ணும் சேர்ந்த போது, இருபத்தைந்து தத்துவங்களில் ஐந்து புலன்களைத் தவிர்த்து, ஆணிடமிருந்து ஐந்து ஞானேந்திரியங்களும் ஐந்து கன்மேந்திரியங்களும் சேர்ந்து,
When man and woman unite, of the twenty-five principles, leaving aside the five senses, the five organs of knowledge and the five organs of action come from the man,
- வரி 2Line 2
பெண்ணின் கருப்பைக்குள் பனிக்குடம் போன்ற நீரில் உருவான கருமுட்டைக்குள், ஐந்து பூதங்களும் நான்கு அந்தக்கரணங்களும் சேர்ந்து கருவாகின்றது.
and within the egg that has formed in the fluid like a dewdrop within the woman's womb, the five elements and the four inner faculties join to become the embryo.
- வரி 3Line 3
அதன்பின் உருவம் பெறும்போது ஐந்து புலன்களும் சேர்ந்துவிட,
After that, when it takes shape and the five senses join it as well,
- வரி 4Line 4
மீதி இருக்கும் புருடன் மட்டும் அந்தக் கருவுடம்பின் நெற்றி உச்சியின் உள்ளே சென்று ஒளிந்துகொண்டது.
the remaining Purusha alone goes and hides itself within the crown of the forehead of that embryo's body.
திருமந்திரம் பாடல் #455





