திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 456

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும்கூவியே அவிழுங் குறிக்கொண்ட போதே.

உரை

பூக்களின் மகரந்தத்தில் கலந்த காற்று உலகத்தில் பூவின் நறுமணத்தைப் பரப்பிக் காற்றிலேயே தங்க வைக்கின்றது; அந்தக் காற்றை மற்ற உயிர்கள் சுவாசிக்கும்போது பூவின் நறுமணத்தை நுகரச் செய்கின்றது. இதைப்போலவே, தாயின் கருப்பைக்குள் இருக்கும் கருவினுள் புகுந்து அதன் உயிரில் கலந்திருக்கும் தனஞ்சயன் என்னும் காற்று, குறிப்பிட்ட காலத்தில் குழந்தையாகப் பிறந்து முதன்முதலில் கூவி அழும்போது வெளிவந்து, குழந்தையை முதன்முதலில் சுவாசிக்கச் செய்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பூக்களின் மகரந்தத்தில் கலந்த காற்று உலகத்தில் பூவின் நறுமணத்தைப் பரப்பிக் காற்றிலேயே தங்க வைக்கின்றது;

  • வரி 2

    அந்தக் காற்றை மற்ற உயிர்கள் சுவாசிக்கும்போது பூவின் நறுமணத்தை நுகரச் செய்கின்றது.

  • வரி 3

    இதைப்போலவே, தாயின் கருப்பைக்குள் இருக்கும் கருவினுள் புகுந்து அதன் உயிரில் கலந்திருக்கும் தனஞ்சயன் என்னும் காற்று,

  • வரி 4

    குறிப்பிட்ட காலத்தில் குழந்தையாகப் பிறந்து முதன்முதலில் கூவி அழும்போது வெளிவந்து, குழந்தையை முதன்முதலில் சுவாசிக்கச் செய்கிறது.

திருமந்திரம் பாடல் #456

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout