தொடர்ந்து படிக்கread this section continuously
இலைப்பொறி ஏற்றி எனதுடல் ஈசன்துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டிநிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவிஉலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.
உரைmeaning
பெண்ணின் உடல் என்ற இயந்திரத்தினுள் ஆணின் உடல் என்ற இயந்திரத்தை இயக்கி, பெண்ணின் கர்ப்பப்பை என்னும் இயந்திரத்தினுள் கருவை உருவாக வைத்த இறைவன், அந்தக் கருவை ஐந்து பூதங்களால் ஆட்டி வைத்து, ஆன்மாவையும் முப்பது தத்துவங்களையும் சேர்த்து உடல் என்ற இயந்திரத்தைக் கொடுத்துக் குழந்தையாக்கி, அதைப் பித்த நீரினுள் பத்து மாதங்கள் மூழ்கி இருக்கச் செய்து, மூச்சுக்காற்றினால் உணவைச் சுட்டு எரிக்கும் வயிறாகிய இயந்திரத்துடன், ஒன்பது துவாரங்களைக் கொண்ட உடம்பில் ஆன்மாவையும் உயிரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து அருளுகின்றான் இறைவன்.
Setting the man's body, which is one machine, working within the woman's body, which is another machine, the Lord makes the embryo form within the machine that is the woman's womb. He stirs that embryo through the five elements, joins to it the soul and the thirty principles, gives it the machine that is the body, and turns it into a child. He keeps it submerged for ten months within the bile-fluid, and, along with the stomach that is the machine that burns food by the breath, joins the soul and the life together within a body that has nine openings, and grants it all by his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பெண்ணின் உடல் என்ற இயந்திரத்தினுள் ஆணின் உடல் என்ற இயந்திரத்தை இயக்கி, பெண்ணின் கர்ப்பப்பை என்னும் இயந்திரத்தினுள் கருவை உருவாக வைத்த இறைவன்,
Setting the man's body, which is one machine, working within the woman's body, which is another machine, the Lord makes the embryo form within the machine that is the woman's womb,
- வரி 2Line 2
அந்தக் கருவை ஐந்து பூதங்களால் ஆட்டி வைத்து, ஆன்மாவையும் முப்பது தத்துவங்களையும் சேர்த்து உடல் என்ற இயந்திரத்தைக் கொடுத்துக் குழந்தையாக்கி,
stirs that embryo through the five elements, joins to it the soul and the thirty principles, gives it the machine that is the body, and turns it into a child,
- வரி 3Line 3
அதைப் பித்த நீரினுள் பத்து மாதங்கள் மூழ்கி இருக்கச் செய்து,
keeps it submerged for ten months within the bile-fluid,
- வரி 4Line 4
மூச்சுக்காற்றினால் உணவைச் சுட்டு எரிக்கும் வயிறாகிய இயந்திரத்துடன், ஒன்பது துவாரங்களைக் கொண்ட உடம்பில் ஆன்மாவையும் உயிரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து அருளுகின்றான் இறைவன்.
and, along with the stomach that is the machine that burns food by the breath, joins the soul and the life together within a body that has nine openings, and grants it all by his grace.
திருமந்திரம் பாடல் #467





