தொடர்ந்து படிக்கread this section continuously
பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலனைந்தும்பிண்டத்தி னூடே பிறந்து மரித்ததுஅண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகைஅண்டத்து நாதத்தில் அமர்ந்திடுந் தானே.
உரைmeaning
பெண்ணின் கருப்பைக்குள் உருவாகும் குழந்தையின் உடலினுள், மாயையால் ஒன்றும் அறியாத ஐந்துவகைப் புலன்களும் சேர்ந்து, உடலோடு வளர்ந்து உடலோடு இறக்கின்றன. அதுபோலவே, அண்டசராசரங்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் இறைவனின் நாதத் தத்துவத்திலிருந்து உருவாகிய ஆன்மா கருவுக்குள் உயிரோடு பிறந்து உடலோடு இறந்தபின், மீண்டும் இறைவனின் நாத தத்துவத்திலேயே சென்று அமர்ந்திருக்கின்றது.
Within the body of the child forming in the woman's womb, the five senses, which through maya know nothing on their own, join together, grow along with the body, and perish along with the body. In the same way, the soul, which arises from the Lord's Nada principle that fills every world and being, is born as life within the embryo and, once the body dies, goes and rests once more in that very Nada principle of the Lord.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பெண்ணின் கருப்பைக்குள் உருவாகும் குழந்தையின் உடலினுள், மாயையால் ஒன்றும் அறியாத ஐந்துவகைப் புலன்களும் சேர்ந்து,
Within the body of the child forming in the woman's womb, the five senses, which through maya know nothing on their own, join together,
- வரி 2Line 2
உடலோடு வளர்ந்து உடலோடு இறக்கின்றன.
grow along with the body, and perish along with the body.
- வரி 3Line 3
அதுபோலவே, அண்டசராசரங்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் இறைவனின் நாதத் தத்துவத்திலிருந்து உருவாகிய ஆன்மா கருவுக்குள் உயிரோடு பிறந்து உடலோடு இறந்தபின்,
In the same way, the soul, which arises from the Lord's Nada principle that fills every world and being, is born as life within the embryo and, once the body dies,
- வரி 4Line 4
மீண்டும் இறைவனின் நாத தத்துவத்திலேயே சென்று அமர்ந்திருக்கின்றது.
goes and rests once more in that very Nada principle of the Lord.
திருமந்திரம் பாடல் #466





