தொடர்ந்து படிக்கread this section continuously
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத்தொழில்ஓகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்துமோகத்துள் ஆங்குஒரு முட்டைசெய் தானே.
உரைmeaning
ஆண் பெண் இருவரின் இன்பத்தில் உருவான கருவின் மூலமாக, ஆன்மாவை உயிராக உருவாக்கும் கொடைத் தொழிலைப் புரிந்து அருளுகின்றான் புனிதனான இறைவன். கருவிற்குள் இருபத்தைந்து தத்துவங்களையும் சேர்த்து, ஆண் பெண்ணின் இன்பத்தின் விளைவாக அங்கே ஒரு சினைமுட்டையைச் செய்து அருளுகின்றான்.
Through the embryo that forms in the pleasure of the man and the woman together, the holy Lord performs the act of giving by which he shapes the soul into life. Bringing together the twenty-five principles within the embryo, he forms, out of the pleasure of the man and the woman, a single fertilized egg there, and grants it by his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆண் பெண் இருவரின் இன்பத்தில் உருவான கருவின் மூலமாக,
Through the embryo that forms in the pleasure of the man and the woman together,
- வரி 2Line 2
ஆன்மாவை உயிராக உருவாக்கும் கொடைத் தொழிலைப் புரிந்து அருளுகின்றான் புனிதனான இறைவன்.
the holy Lord performs the act of giving by which he shapes the soul into life.
- வரி 3Line 3
கருவிற்குள் இருபத்தைந்து தத்துவங்களையும் சேர்த்து,
Bringing together the twenty-five principles within the embryo,
- வரி 4Line 4
ஆண் பெண்ணின் இன்பத்தின் விளைவாக அங்கே ஒரு சினைமுட்டையைச் செய்து அருளுகின்றான்.
he forms, out of the pleasure of the man and the woman, a single fertilized egg there, and grants it by his grace.
திருமந்திரம் பாடல் #465





