திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 464

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்புக்கிடும் எண்விரல் புகுந்து நால்விரல்அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.

உரை

ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சேர்ந்து சிவப்பு நிறமான கருமுட்டையாக வளர்கின்றன. இதற்காக ஆணின் சுக்கிலம் எட்டு விரற்கடை அளவும், பெண்ணின் சுரோணிதம் நான்கு விரற்கடை அளவும் பயணிக்கின்றது. இப்படிப் பயணிக்கும் அனைத்தும் கருமுட்டையாக வளர்வதில்லை; இறைவன் அருளால் பிழைத்த ஒன்றோ, அல்லது சமயத்தில் பலவும் ஒன்றாகவே கருமுட்டையாக வளர்கின்றது. அப்படி உருவான கருமுட்டை உடல் எட்டு ஜாண் அளவிற்கு வளர்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சேர்ந்து சிவப்பு நிறமான கருமுட்டையாக வளர்கின்றன.

  • வரி 2

    இதற்காக ஆணின் சுக்கிலம் எட்டு விரற்கடை அளவும், பெண்ணின் சுரோணிதம் நான்கு விரற்கடை அளவும் பயணிக்கின்றது.

  • வரி 3

    இப்படிப் பயணிக்கும் அனைத்தும் கருமுட்டையாக வளர்வதில்லை; இறைவன் அருளால் பிழைத்த ஒன்றோ, அல்லது சமயத்தில் பலவும் ஒன்றாகவே கருமுட்டையாக வளர்கின்றது.

  • வரி 4

    அப்படி உருவான கருமுட்டை உடல் எட்டு ஜாண் அளவிற்கு வளர்கிறது.

திருமந்திரம் பாடல் #464

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout