தொடர்ந்து படிக்கread this section continuously
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளேவழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்பழிபல செய்கின்ற பாசக் கருவைச்சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.
உரைmeaning
ஆன்மா தான் இருக்கும் உடலின் மூலம் அனுபவிக்க வேண்டிய வினைகளை அனுபவித்து முடிக்கும்போதே, அதன் அடுத்த பிறவியை எடுக்க உதவும் பலவிதமான வழிகளை இறைவன் உருவாக்கி விடுகின்றான். ஆன்மா இருந்த உடல் இறந்தபின், சுற்றத்தாரால் நீராட்டப்பட்டுச் சுடுகாட்டிற்குச் சுட்டெரிக்க எடுத்துச் செல்லப்படும்போதே, அதிலிருந்து வெளிப்பட்ட ஆன்மாவை, இன்னும் அனுபவிக்க வேண்டிய பலவிதமான வினைகளான பந்த பாசத்தால் கட்டி, புதிய கருவாக உருவாக்கிக் கர்ப்பப் பைக்குள் வைக்கின்றான். அங்கே பெண்ணின் அடிவயிற்றில் இருக்கும் நெருப்பினாலும் நீராலும் அது பாதிக்கப்படாதபடிக் காப்பாற்றி அருளுகின்றான் இறைவன்.
The very moment the soul finishes experiencing, through the body it dwells in, the deeds it must experience, the Lord already shapes the many paths that will carry it to its next birth. After the body in which it dwelt dies, even as the relatives bathe it and carry it away to be burnt at the cremation ground, he binds the soul that has come out of it with the bond of attachment, the many further deeds it still has to undergo, forms it into a new embryo, and places it within a womb. And there he protects it and keeps it, by his grace, from harm at the hands of the heat and the fluid in the woman's lower belly.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆன்மா தான் இருக்கும் உடலின் மூலம் அனுபவிக்க வேண்டிய வினைகளை அனுபவித்து முடிக்கும்போதே, அதன் அடுத்த பிறவியை எடுக்க உதவும் பலவிதமான வழிகளை இறைவன் உருவாக்கி விடுகின்றான்.
The very moment the soul finishes experiencing, through the body it dwells in, the deeds it must experience, the Lord already shapes the many paths that will carry it to its next birth.
- வரி 2Line 2
ஆன்மா இருந்த உடல் இறந்தபின், சுற்றத்தாரால் நீராட்டப்பட்டுச் சுடுகாட்டிற்குச் சுட்டெரிக்க எடுத்துச் செல்லப்படும்போதே,
After the body in which it dwelt dies, even as the relatives bathe it and carry it away to be burnt at the cremation ground,
- வரி 3Line 3
அதிலிருந்து வெளிப்பட்ட ஆன்மாவை, இன்னும் அனுபவிக்க வேண்டிய பலவிதமான வினைகளான பந்த பாசத்தால் கட்டி, புதிய கருவாக உருவாக்கிக் கர்ப்பப் பைக்குள் வைக்கின்றான்.
he binds the soul that has come out of it with the bond of attachment, the many further deeds it still has to undergo, forms it into a new embryo, and places it within a womb.
- வரி 4Line 4
அங்கே பெண்ணின் அடிவயிற்றில் இருக்கும் நெருப்பினாலும் நீராலும் அது பாதிக்கப்படாதபடிக் காப்பாற்றி அருளுகின்றான் இறைவன்.
And there he protects it and keeps it, by his grace, from harm at the hands of the heat and the fluid in the woman's lower belly.
திருமந்திரம் பாடல் #463





