திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 462

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்துகுதஞ்செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்விதஞ்செய்யும் மாறே விதித்தொழிந் தானே.

உரை

நிலவைப் போன்ற வெள்ளை நிறத்தில், சூரியனைப் போன்ற பிரகாசிக்கும் ஒளி உடலாக இருக்கும் இறைவன், தாயின் சூரிய கலை (வலது நாசி) மூச்சுக்காற்றின் மூலம் இதமான சூட்டையும், சந்திர கலை (இடது நாசி) மூச்சுக்காற்றின் மூலம் இதமான குளிர்ச்சியையும் கொண்டு, கருவின் உடலோடு கலந்து எங்கும் பரவி நின்று, தாயின் அடிவயிற்றில் உணவைச் செரிப்பதற்காக சூடாக உருவாகும் நெருப்பினாலும் நீராலும் கரு ஒருவித பாதிப்பும் அடையாமல் இருக்கும்படி காத்து நின்று, குழந்தை எந்த விதமாக வளர வேண்டுமோ அப்படியெல்லாம் வளர வைத்து, குழந்தை பிறக்கும்வரை காத்து அருளுகின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    நிலவைப் போன்ற வெள்ளை நிறத்தில், சூரியனைப் போன்ற பிரகாசிக்கும் ஒளி உடலாக இருக்கும் இறைவன்,

  • வரி 2

    தாயின் சூரிய கலை (வலது நாசி) மூச்சுக்காற்றின் மூலம் இதமான சூட்டையும், சந்திர கலை (இடது நாசி) மூச்சுக்காற்றின் மூலம் இதமான குளிர்ச்சியையும் கொண்டு, கருவின் உடலோடு கலந்து எங்கும் பரவி நின்று,

  • வரி 3

    தாயின் அடிவயிற்றில் உணவைச் செரிப்பதற்காக சூடாக உருவாகும் நெருப்பினாலும் நீராலும் கரு ஒருவித பாதிப்பும் அடையாமல் இருக்கும்படி காத்து நின்று,

  • வரி 4

    குழந்தை எந்த விதமாக வளர வேண்டுமோ அப்படியெல்லாம் வளர வைத்து, குழந்தை பிறக்கும்வரை காத்து அருளுகின்றான்.

திருமந்திரம் பாடல் #462

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout