தொடர்ந்து படிக்கread this section continuously
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்துன்பக் கலசம் அணைவான் ஒருவனேஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டுவெந்தது சூளையில் விளைந்தது தானே.
உரைmeaning
இன்பத்தில் கலந்த ஆண் பெண் இருவரும் மனமொத்து வைத்த கருவாகிய மண், பந்த பாசத்தால் சிக்குண்டு துன்பத்தைப் பெறும் களிமண்ணாலான கலசம் போன்றது. அதைக் குயவன் போலக் குழைத்து உருவாக்குபவன் இறைவன் ஒருவனே. இந்தக் களிமண் கலசத்தில் ஒன்பது துவாரங்களும், பதினெட்டு அச்சாரங்களும் (எலும்புகள்) உள்ளன. எப்படிக் குயவன் தான் குழைத்து உருவாக்கிய கலசத்தை உறுதியாக்க சூளையில் இட்டுச் சுடுகிறானோ, அதுபோல இறைவனும் கருவைத் தாயின் சூடான அடிவயிற்றுக் கர்ப்பப்பை என்னும் சூளையில் வைத்துப் பத்து மாதங்கள் சுட்டுப் பாதுகாத்துக் குழந்தையாக உருவாக்கி அருளுகின்றான்.
The clay that is the embryo, laid down by mutual consent by the man and the woman joined in pleasure, is like a clay pot caught in the bond of attachment, a pot that comes to bear sorrow. The Lord alone is the one who kneads and shapes it, like a potter. This clay pot has nine openings and eighteen joints, that is, bones. Just as a potter fires the pot he has kneaded and shaped in a kiln to make it firm, so too the Lord places the embryo in the kiln that is the mother's own warm womb in her lower belly, fires and protects it there for ten months, and shapes it into a child by his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இன்பத்தில் கலந்த ஆண் பெண் இருவரும் மனமொத்து வைத்த கருவாகிய மண், பந்த பாசத்தால் சிக்குண்டு துன்பத்தைப் பெறும் களிமண்ணாலான கலசம் போன்றது.
The clay that is the embryo, laid down by mutual consent by the man and the woman joined in pleasure, is like a clay pot caught in the bond of attachment, a pot that comes to bear sorrow.
- வரி 2Line 2
அதைக் குயவன் போலக் குழைத்து உருவாக்குபவன் இறைவன் ஒருவனே.
The Lord alone is the one who kneads and shapes it, like a potter.
- வரி 3Line 3
இந்தக் களிமண் கலசத்தில் ஒன்பது துவாரங்களும், பதினெட்டு அச்சாரங்களும் (எலும்புகள்) உள்ளன.
This clay pot has nine openings and eighteen joints, that is, bones.
- வரி 4Line 4
எப்படிக் குயவன் தான் குழைத்து உருவாக்கிய கலசத்தை உறுதியாக்க சூளையில் இட்டுச் சுடுகிறானோ, அதுபோல இறைவனும் கருவைத் தாயின் சூடான அடிவயிற்றுக் கர்ப்பப்பை என்னும் சூளையில் வைத்துப் பத்து மாதங்கள் சுட்டுப் பாதுகாத்துக் குழந்தையாக உருவாக்கி அருளுகின்றான்.
Just as a potter fires the pot he has kneaded and shaped in a kiln to make it firm, so too the Lord places the embryo in the kiln that is the mother's own warm womb in her lower belly, fires and protects it there for ten months, and shapes it into a child by his grace.
திருமந்திரம் பாடல் #468





