திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 469

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

அறியீர் உடம்பினி லாகிய ஆறும்பிறியீர் அதனிற் பெருகுங் குணங்கள்செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்டதறிவீர் ஐந்தினுள் ளானது பிண்டமே.

உரை

உடம்பு அடையும் ஆறு வகையான நிலைகளை அறியாமல் இருக்கின்றீர்கள். அந்த நிலைகளில் வினைப் பயனால் உருவாகிப் பெரியதாக வளரும் பலவித குணங்களில், நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து, கெட்டதை விட்டுப் பிரியாமல் இருக்கின்றீர்கள். பஞ்ச பூதங்களால் ஆன இந்த பிண்டமாகிய உடம்பினுள் மாபெரும் சித்திகளையும் இறைவன் வைத்திருப்பதை அறியாமல், அதை அடைந்து பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவதற்கும் முயற்சி செய்யாமல் இருக்கின்றீர்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    உடம்பு அடையும் ஆறு வகையான நிலைகளை அறியாமல் இருக்கின்றீர்கள்.

  • வரி 2

    அந்த நிலைகளில் வினைப் பயனால் உருவாகிப் பெரியதாக வளரும் பலவித குணங்களில், நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து, கெட்டதை விட்டுப் பிரியாமல் இருக்கின்றீர்கள்.

  • வரி 3

    பஞ்ச பூதங்களால் ஆன இந்த பிண்டமாகிய உடம்பினுள் மாபெரும் சித்திகளையும் இறைவன் வைத்திருப்பதை அறியாமல்,

  • வரி 4

    அதை அடைந்து பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவதற்கும் முயற்சி செய்யாமல் இருக்கின்றீர்கள்.

திருமந்திரம் பாடல் #469

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout