திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 470

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்மடைவைத்த ஒன்பது வாய்தலம் வைத்துத்திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

உரை

ஆன்மா தனது வினையின் பயனால் பிறவி எடுக்க உடலைப் படைத்து, அதற்குள் ஆன்மாவை வைத்து, தேவையான காலத்திற்கு வாழும்படி உயிரையும் வைத்து, தேவைக்கேற்பத் திறந்து மூடிக்கொள்கின்ற ஒன்பது துவாரங்களைக் கொண்ட உறுதியான உடலையும் வைத்து, அந்த உயிர் பிறவியில்லா நிலையை அடைய, அந்த உடலின் தலையின் உச்சியில், சகஸ்ரரதளத்தில், ஆயிரம் இதழ் தாமரையின் மேல் நெருப்பு வடிவமாகத் தங்கியிருப்பதைக் கண்டு, அவனோடு பேரின்பத்தில் கலந்து திளைத்து நின்றேன்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆன்மா தனது வினையின் பயனால் பிறவி எடுக்க உடலைப் படைத்து, அதற்குள் ஆன்மாவை வைத்து, தேவையான காலத்திற்கு வாழும்படி உயிரையும் வைத்து,

  • வரி 2

    தேவைக்கேற்பத் திறந்து மூடிக்கொள்கின்ற ஒன்பது துவாரங்களைக் கொண்ட உறுதியான உடலையும் வைத்து,

  • வரி 3

    அந்த உயிர் பிறவியில்லா நிலையை அடைய, அந்த உடலின் தலையின் உச்சியில், சகஸ்ரரதளத்தில், ஆயிரம் இதழ் தாமரையின் மேல் நெருப்பு வடிவமாகத் தங்கியிருப்பதைக் கண்டு,

  • வரி 4

    அவனோடு பேரின்பத்தில் கலந்து திளைத்து நின்றேன்.

திருமந்திரம் பாடல் #470

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout