தொடர்ந்து படிக்கread this section continuously
கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்மூட்டுகின் றான்முதல் யோனி மயமவன்கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுருநீட்டுகின் றான்ஆகத்து நேர்பட்ட வாறே.
உரைmeaning
பாடல் #470ல் உள்ளபடி ஈசனுடன் பேரின்பத்தில் கலந்து திளைத்திருந்தபோது, அவன் அருளியவற்றைக் கேட்டு வியந்து நின்றேன். எங்கும் கலந்திருக்கும், ஒரு மாசும் இல்லாத மாபெரும் சுடராக இருக்கும் இறைவனே, வினைகளின் பொருட்டு உயிர்களைப் பிறக்க வைக்க முழுமுதல் காரணமாக இருக்கின்றான்; உயிர்கள் தம் வினைகளை அனுபவிக்க வேண்டிய மாயையாகவும் அவனே இருக்கின்றான். சுக்கிலத்தையும் சுரோணிதத்தையும் சேர்த்துக் கர்ப்பப் பைக்குள் கொண்டு சென்று கருவாக்கி, அதைக் குழந்தையின் உருவமாக நீட்டித் தழுவிக் காப்பாற்றுகிறான். அது பிறந்தபின் அதனுடன் உள் ஒளியாகக் கலந்து, மாயையால் மறைந்து நின்று, அந்தக் குழந்தை வாழும் காலம்வரை உள்ளிருந்தே வழிநடத்துகின்றான் என்பதையும் கேட்டு உணர்ந்தேன்.
As told in verse 470, while I stood immersed in supreme bliss with the Lord, I listened in wonder to what he granted me. He who mingles everywhere, the great flame without a single blemish, is himself the first cause who brings souls to birth for the sake of their deeds, and is himself also the maya through which souls must undergo those deeds. He brings the seed and the blood together within the womb, forms the embryo, and extends and holds it, shaping it into the form of a child. And after it is born, he mingles with it as the inner light, remains hidden through maya, and guides it from within for as long as the child lives; this I heard and understood.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #470ல் உள்ளபடி ஈசனுடன் பேரின்பத்தில் கலந்து திளைத்திருந்தபோது, அவன் அருளியவற்றைக் கேட்டு வியந்து நின்றேன். எங்கும் கலந்திருக்கும், ஒரு மாசும் இல்லாத மாபெரும் சுடராக இருக்கும் இறைவனே,
As told in verse 470, while I stood immersed in supreme bliss with the Lord, I listened in wonder to what he granted me. He who mingles everywhere, the great flame without a single blemish,
- வரி 2Line 2
வினைகளின் பொருட்டு உயிர்களைப் பிறக்க வைக்க முழுமுதல் காரணமாக இருக்கின்றான்; உயிர்கள் தம் வினைகளை அனுபவிக்க வேண்டிய மாயையாகவும் அவனே இருக்கின்றான்.
is himself the first cause who brings souls to birth for the sake of their deeds, and is himself also the maya through which souls must undergo those deeds.
- வரி 3Line 3
சுக்கிலத்தையும் சுரோணிதத்தையும் சேர்த்துக் கர்ப்பப் பைக்குள் கொண்டு சென்று கருவாக்கி, அதைக் குழந்தையின் உருவமாக நீட்டித் தழுவிக் காப்பாற்றுகிறான்.
He brings the seed and the blood together within the womb, forms the embryo, and extends and holds it, shaping it into the form of a child.
- வரி 4Line 4
அது பிறந்தபின் அதனுடன் உள் ஒளியாகக் கலந்து, மாயையால் மறைந்து நின்று, அந்தக் குழந்தை வாழும் காலம்வரை உள்ளிருந்தே வழிநடத்துகின்றான் என்பதையும் கேட்டு உணர்ந்தேன்.
And after it is born, he mingles with it as the inner light, remains hidden through maya, and guides it from within for as long as the child lives; this I heard and understood.
திருமந்திரம் பாடல் #471





