திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 480

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.

உரை

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் ஆணிடமிருந்து விந்து வெளிவந்து பெண்ணின் யோனியில் பாய்ந்த பிறகு, ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு நான்கு வினாடிக்கும் குறைவாக வெளிவந்தால் பிறக்கும் குழந்தை குட்டையாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று மெலிந்து வெளிவந்தால் பிறக்கும் குழந்தை முடமாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று சீராக வராமல் தடைபட்டுத் தடைபட்டு வந்தால் பிறக்கும் குழந்தை கூனுடன் பிறக்கும். இவ்வாறு வெளிவரும் மூச்சுக்காற்றின் அளவைக் கணக்கிடும் முறை ஆண்களுக்கே உரியது; பெண்கள் விடும் மூச்சுக்காற்றின் அளவு இதில் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

வரி வாரியாக

  • வரி 1

    ஆண் பெண் இன்பத்தின் முடிவில் ஆணிடமிருந்து விந்து வெளிவந்து பெண்ணின் யோனியில் பாய்ந்த பிறகு, ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு நான்கு வினாடிக்கும் குறைவாக வெளிவந்தால் பிறக்கும் குழந்தை குட்டையாகப் பிறக்கும்.

  • வரி 2

    ஆணின் மூச்சுக்காற்று மெலிந்து வெளிவந்தால் பிறக்கும் குழந்தை முடமாகப் பிறக்கும்.

  • வரி 3

    ஆணின் மூச்சுக்காற்று சீராக வராமல் தடைபட்டுத் தடைபட்டு வந்தால் பிறக்கும் குழந்தை கூனுடன் பிறக்கும்.

  • வரி 4

    இவ்வாறு வெளிவரும் மூச்சுக்காற்றின் அளவைக் கணக்கிடும் முறை ஆண்களுக்கே உரியது; பெண்கள் விடும் மூச்சுக்காற்றின் அளவு இதில் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

திருமந்திரம் பாடல் #480

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout