திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 479

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் தவ்வகைபாய்ந்திடும் யோகியர்க்குப் பாய்ச்சலும் ஆமே.

உரை

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் ஆணிடமிருந்து விந்து வெளிவந்து பெண்ணின் யோனியில் பாய்ந்த பிறகு, ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு ஐந்து வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை நூறு ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு நான்கு வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை எண்பது ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். எந்த அளவு மூச்சுக்காற்று வெளிவருகின்றது என்பதைப் பிரித்துப் பார்த்து அறிந்துகொண்டு, தமக்கு வேண்டிய அளவிற்கு அதை வெளிவரச் செய்வது, யோக சாதனைகளைப் புரிந்து அவற்றைக் கைவரப் பெற்ற யோகியர்களுக்கே முடியும்; ஆகவே அவர்களுக்கு ஆயுள் அளவு என்பது கிடையாது.

வரி வாரியாக

  • வரி 1

    ஆண் பெண் இன்பத்தின் முடிவில் ஆணிடமிருந்து விந்து வெளிவந்து பெண்ணின் யோனியில் பாய்ந்த பிறகு, ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு ஐந்து வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை நூறு ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும்.

  • வரி 2

    ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு நான்கு வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை எண்பது ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும்.

  • வரி 3

    எந்த அளவு மூச்சுக்காற்று வெளிவருகின்றது என்பதைப் பிரித்துப் பார்த்து அறிந்துகொள்வது யோக சாதனைகளைப் புரிந்து அவற்றைக் கைவரப் பெற்ற யோகியர்களுக்கே முடியும்.

  • வரி 4

    தமக்கு வேண்டிய அளவிற்கு அதை வெளிவரச் செய்வதும் அவர்களுக்கே முடியும்; ஆகவே அவர்களுக்கு ஆயுள் அளவு என்பது கிடையாது.

திருமந்திரம் பாடல் #479

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout