திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 478

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

உரை

ஆண் பெண் கூடலின் முடிவில் கலக்கும் நீரில் ஆணின் விந்து பெண்ணின் சுரோணிதத்தை விட அதிகமாக இருந்தால் பிறப்பது ஆண் குழந்தையாகும். ஆணின் விந்தை விடப் பெண்ணின் சுரோணிதம் அதிகமாக இருந்தால் பிறப்பது பெண் குழந்தையாகும். இரண்டும் சமமாக இருந்தால் பிறப்பது அலியாகும். இதில் ஆணின் விந்தில் உயிரணுவின் சக்தி மிகுதியாக இருந்தால் பிறக்கும் குழந்தை உலகையே ஆளும் அரசனைப் போல சீரும் சிறப்பும் மிக்கதாக இருக்கும். பெண்ணின் சுரோணிதத்தின் உயிரணு அழிக்கும் சக்தி மிகுதியாக இருந்தால் விந்து பாய்ந்தும் பயனின்றி கரு உருவாகாமலே போய்விடும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆண் பெண் கூடலின் முடிவில் கலக்கும் நீரில் ஆணின் விந்து பெண்ணின் சுரோணிதத்தை விட அதிகமாக இருந்தால் பிறப்பது ஆண் குழந்தையாகும், பெண்ணின் சுரோணிதம் அதிகமாக இருந்தால் பிறப்பது பெண் குழந்தையாகும்.

  • வரி 2

    இரண்டும் சமமாக இருந்தால் பிறப்பது அலியாகும்.

  • வரி 3

    ஆணின் விந்தில் உயிரணுவின் சக்தி மிகுதியாக இருந்தால் பிறக்கும் குழந்தை உலகையே ஆளும் அரசனைப் போல சீரும் சிறப்பும் மிக்கதாக இருக்கும்.

  • வரி 4

    பெண்ணின் சுரோணிதத்தின் உயிரணு அழிக்கும் சக்தி மிகுதியாக இருந்தால் விந்து பாய்ந்தும் பயனின்றி கரு உருவாகாமலே போய்விடும்.

திருமந்திரம் பாடல் #478

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout