தொடர்ந்து படிக்கread this section continuously
மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்காண்பது ஆண்பெண் அலியெனும் கற்பனைபூண்பது மாதா பிதாவழி போலவேஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.
உரைmeaning
இறைவனது கருணையால் தாயின் வயிற்றில் வளரும் ஜோதி வடிவமான ஆன்மாவை ஆணாகவும் பெண்ணாகவும் அலியெனவும் பார்ப்பது மாயையே. அவ்வாறு உருவம் கொடுப்பது அக்குழந்தையின் தாய் தந்தையரின் வழிமுறையால் தான் நிகழ்கிறதே தவிர, ஆன்மாவிற்கு என்று ஒரு உருவமும் இல்லை. தந்தை தாயின் வழியாகவே அவர்களின் சாயலில் கருவைப் பதித்து, அதை ஆண் பெண் அலி என்ற உருவமாகச் செய்வது இறைவனின் வல்லமையே.
It is delusion to see the soul, shining like light, that grows in the mother's womb by the grace of God as male, female or neither. That it takes such a form comes only through the ways of the child's own mother and father, for the soul itself has no form at all. It is God's own power that, through the father and the mother, sets the seed in their likeness and shapes it into the form of male, female or neither.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனது கருணையால் தாயின் வயிற்றில் வளரும் ஜோதி வடிவமான ஆன்மாவை ஆணாகவும் பெண்ணாகவும் அலியெனவும் பார்ப்பது மாயையே.
It is delusion to see the soul, shining like light, that grows in the mother's womb by the grace of God as male, female or neither.
- வரி 2Line 2
அவ்வாறு உருவம் கொடுப்பது அக்குழந்தையின் தாய் தந்தையரின் வழிமுறையால் தான் நிகழ்கிறதே தவிர,
That it takes such a form comes only through the ways of the child's own mother and father,
- வரி 3Line 3
ஆன்மாவிற்கு என்று ஒரு உருவமும் இல்லை.
for the soul itself has no form at all.
- வரி 4Line 4
தந்தை தாயின் வழியாகவே அவர்களின் சாயலில் கருவைப் பதித்து, அதை ஆண் பெண் அலி என்ற உருவமாகச் செய்வது இறைவனின் வல்லமையே.
It is God's own power that, through the father and the mother, sets the seed in their likeness and shapes it into the form of male, female or neither.
திருமந்திரம் பாடல் #477





