திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 481

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

மாதா உதரம் மலமிகின் மந்தனாம்மாதா உதரம் சலமிகின் மூங்கையாம்மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லைமாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

உரை

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் விந்து கருமுட்டையுடன் சேரும்போது, தாயாகப் போகும் பெண்ணின் வயிற்றில் மலக்கழிவு அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுடன் பிறக்கும். அவள் வயிற்றில் சிறுநீர் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகப் பிறக்கும். மலக்கழிவும் சிறுநீரும் சமமான அளவில் இருந்தால் பிறக்கும் குழந்தை குருடாகப் பிறக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆண் பெண் இன்பத்தின் முடிவில் விந்து கருமுட்டையுடன் சேரும்போது, தாயாகப் போகும் பெண்ணின் வயிற்றில் மலக்கழிவு அதிகமாக இருந்தால்,

  • வரி 2

    பிறக்கும் குழந்தை மந்த புத்தியுடன் பிறக்கும்.

  • வரி 3

    அவள் வயிற்றில் சிறுநீர் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகப் பிறக்கும்.

  • வரி 4

    மலக்கழிவும் சிறுநீரும் சமமான அளவில் இருந்தால் பிறக்கும் குழந்தை குருடாகப் பிறக்கும்.

திருமந்திரம் பாடல் #481

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout