திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 482

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்குழவி அலியாம் கொண்டகால் ஒக்கிலே.

உரை

ஆண் பெண் இன்பத்தின் போது ஆணின் மூச்சுக்காற்று வலப்புற நாசியான சூரியகலை வழியே சென்றால் பிறக்கும் குழந்தை ஆணாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று இடப்புற நாசியான சந்திரகலை வழியே சென்றால் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று இரு நாசிகள் வழியாகவும் ஒன்றாகச் சென்றால் பிறக்கும் குழந்தை அலியாகப் பிறக்கும். உடலுறவின் போது பெண்ணின் மூச்சுக்காற்றை எதிர்த்து அபானன் என்னும் மலக்காற்று வந்தால் பிறக்கும் குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆண் பெண் இன்பத்தின் போது ஆணின் மூச்சுக்காற்று வலப்புற நாசியான சூரியகலை வழியே சென்றால் பிறக்கும் குழந்தை ஆணாகப் பிறக்கும்.

  • வரி 2

    ஆணின் மூச்சுக்காற்று இடப்புற நாசியான சந்திரகலை வழியே சென்றால் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறக்கும்.

  • வரி 3

    ஆணின் மூச்சுக்காற்று இரு நாசிகள் வழியாகவும் ஒன்றாகச் சென்றால் பிறக்கும் குழந்தை அலியாகப் பிறக்கும்.

  • வரி 4

    உடலுறவின் போது பெண்ணின் மூச்சுக்காற்றை எதிர்த்து அபானன் என்னும் மலக்காற்று வந்தால் பிறக்கும் குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும்.

திருமந்திரம் பாடல் #482

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout