தொடர்ந்து படிக்கread this section continuously
முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்அதற்கது வாம்இன்ப மாவது போலஅதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
உரைmeaning
ஒரு விதை முதலில் முளைத்துச் செடியாக வளர்ந்து, பின்பு வேர், மண், நீர் ஆகியவற்றுடன் இயைந்து, தன்னைப் போலவே வலிமையுடனும் தன் தன்மையுடனும் பல செடிகளைப் புதர் போலப் பெருக்குகிறது. ஒரு வகைச் செடி தன் வகையையே தவிர வேறு வகைச் செடியை உருவாக்காது. உலகில் எத்தனை வகைத் தாவரங்கள் தத்தம் வகைகளை உருவாக்குகின்றனவோ, அத்தனை வகைத் தாவரங்களாகவும் ஆதியாய் இருக்கும் இறைவனே இருக்கின்றான்.
A seed first sprouts and grows into a plant, and afterwards, working with root, soil and water, multiplies into many plants like a thicket, each with the same strength and the same nature as itself. One kind of plant produces only its own kind, never another kind. And in as many kinds as the plants of this world produce their own kinds, in that many kinds itself exists the God who is the first cause.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒரு விதை முதலில் முளைத்துச் செடியாக வளர்ந்து, பின்பு வேர், மண், நீர் ஆகியவற்றுடன் இயைந்து,
A seed first sprouts and grows into a plant, and afterwards, working with root, soil and water,
- வரி 2Line 2
தன்னைப் போலவே வலிமையுடனும் தன் தன்மையுடனும் பல செடிகளைப் புதர் போலப் பெருக்குகிறது.
multiplies into many plants like a thicket, each with the same strength and the same nature as itself.
- வரி 3Line 3
ஒரு வகைச் செடி தன் வகையையே தவிர வேறு வகைச் செடியை உருவாக்காது.
One kind of plant produces only its own kind, never another kind.
- வரி 4Line 4
உலகில் எத்தனை வகைத் தாவரங்கள் தத்தம் வகைகளை உருவாக்குகின்றனவோ, அத்தனை வகைத் தாவரங்களாகவும் ஆதியாய் இருக்கும் இறைவனே இருக்கின்றான்.
And in as many kinds as the plants of this world produce their own kinds, in that many kinds itself exists the God who is the first cause.
திருமந்திரம் பாடல் #489





