திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 490

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏனோர் பெருமைய னாகினும் எம்இறைஊனேய் சிறுமையுள் உட்கலந் தாங்குளன்வானோர் அறியும் அளவல்ல மாதேவன்தானே அறியும் தவத்தினது உள்ளே.

உரை

அனைத்துத் தெய்வங்களையும்விடப் பெருமை மிக்க நமது இறைவன், வினைகளும் மலங்களும் கொண்ட குறைபாடுடைய உயிர்களின் உடல்களிலும் கலந்திருக்கின்றான். வானுலகத் தேவர்களாலும் அறிய முடியாத அளவு பெருமையுடைய அந்த மகாதேவனை, உயிர்கள் தமக்குள் தவம் செய்து தமக்குள்ளேயே அறியலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்துத் தெய்வங்களையும்விடப் பெருமை மிக்க நமது இறைவன்,

  • வரி 2

    வினைகளும் மலங்களும் கொண்ட குறைபாடுடைய உயிர்களின் உடல்களிலும் கலந்திருக்கின்றான்.

  • வரி 3

    வானுலகத் தேவர்களாலும் அறிய முடியாத அளவு பெருமையுடைய அந்த மகாதேவனை,

  • வரி 4

    உயிர்கள் தமக்குள் தவம் செய்து தமக்குள்ளேயே அறியலாம்.

திருமந்திரம் பாடல் #490

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout