தொடர்ந்து படிக்கread this section continuously
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிடஎண்ணிய வேதம் இசைத்த பரப்பினைமண்முத லாகவே வகுத்துவைத் தானே.
உரைmeaning
ஆன்மா பிறவி எடுப்பதற்காக, நெற்றிக் கண்ணையுடைய சிவனின் திருநாமமாகிய ஐந்தெழுத்தும் (நமசிவாய), பிரணவமும் (ஓம்) கலந்து, வினைப்படி பந்த பாச மாயையை வைத்து ஆன்மாவைச் சேர்த்து உடம்பாகச் செய்த இறைவனே, அந்த ஆன்மா தனது பந்த பாச மாயையை நீக்கி இறைவனிடம் வந்து சேருவதற்கான வழிமுறைகளை வேதங்களாகக் கொடுத்து அருளினான். அந்த வேதங்களின் பொருளைப் புரிந்து உணர்ந்துகொள்ள, கருவினுள் தத்துவங்களை வகைப்படுத்தி வைத்து அருளினான்.
So that the soul may take birth, the five-lettered sacred name of Shiva of the forehead eye, Namasivaya, mingled with Pranava, Om, and the Lord who set the bond of attachment and maya in place according to deeds, and joined the soul to make it a body, is the very one who granted the Vedas as the means by which that soul may remove its bond of attachment and maya and come to be united with the Lord. And so that its meaning may be understood, he sorted and set the principles within the embryo in their kinds, and granted this too.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆன்மா பிறவி எடுப்பதற்காக, நெற்றிக் கண்ணையுடைய சிவனின் திருநாமமாகிய ஐந்தெழுத்தும் (நமசிவாய), பிரணவமும் (ஓம்) கலந்து,
So that the soul may take birth, the five-lettered sacred name of Shiva of the forehead eye, Namasivaya, mingled with Pranava, Om,
- வரி 2Line 2
வினைப்படி பந்த பாச மாயையை வைத்து ஆன்மாவைச் சேர்த்து உடம்பாகச் செய்த இறைவனே,
and the Lord who set the bond of attachment and maya in place according to deeds, and joined the soul to make it a body,
- வரி 3Line 3
அந்த ஆன்மா தனது பந்த பாச மாயையை நீக்கி இறைவனிடம் வந்து சேருவதற்கான வழிமுறைகளை வேதங்களாகக் கொடுத்து அருளினான்.
is the very one who granted the Vedas as the means by which that soul may remove its bond of attachment and maya and come to be united with the Lord.
- வரி 4Line 4
அந்த வேதங்களின் பொருளைப் புரிந்து உணர்ந்துகொள்ள, கருவினுள் தத்துவங்களை வகைப்படுத்தி வைத்து அருளினான்.
And so that its meaning may be understood, he sorted and set the principles within the embryo in their kinds, and granted this too.
திருமந்திரம் பாடல் #474





