திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 475

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

அருளல்ல தில்லை அரனவன் அன்றிஅருளில்லை யாதலி னாலோர் உயிர்க்குத்தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

உரை

அருளைத் தருகின்ற சக்தியில்லாமல் சிவம் இல்லை; அசையா சக்தியாகிய சிவம் இல்லாமல் அருளுகின்ற சக்தியும் இல்லை. உயிர்களுக்கு உடலைத் தருகின்ற போதே, சிவத்தையும் சக்தியையும் இரண்டு வளர்ப்புத் தாய்களாகக் கூடவே அனுப்பி வைக்கின்றான் இறைவன். சிவமும் அன்பும் வேறு வேறு இல்லை; வளர்ப்புத் தாய்களாக வந்த சிவமும் சக்தியும் அன்போடு கருவை வளர்த்துப் பாதுகாத்து அதைப் பிறக்க வைக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    அருளைத் தருகின்ற சக்தியில்லாமல் சிவம் இல்லை;

  • வரி 2

    அசையா சக்தியாகிய சிவம் இல்லாமல் அருளுகின்ற சக்தியும் இல்லை.

  • வரி 3

    உயிர்களுக்கு உடலைத் தருகின்ற போதே, சிவத்தையும் சக்தியையும் இரண்டு வளர்ப்புத் தாய்களாகக் கூடவே அனுப்பி வைக்கின்றான் இறைவன்.

  • வரி 4

    சிவமும் அன்பும் வேறு வேறு இல்லை; வளர்ப்புத் தாய்களாக வந்த சிவமும் சக்தியும் அன்போடு கருவை வளர்த்துப் பாதுகாத்து அதைப் பிறக்க வைக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #475

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout