திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 473

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்கட்டிய மூன்று கரணமு மாய்விடும்ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பைக்கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.

உரை

பாடல் #472ல் உள்ளபடி, குழந்தையின் உடலெங்கும் பரவி ஒட்டிக்கொள்ளும் அந்த எட்டுவித சூட்சும காரணிகளாக இருப்பவை, ஐந்து ஞானேந்திரியங்களும், மூன்று அந்தக்கரணங்களும் ஆகும். இவற்றோடு குழந்தையை ஒட்டியே பிறப்பது வினைப் பயனால் பெற்ற பந்தம் பாசம் எனும் உணர்வுகள். இப்படி எல்லாம் கலந்து உருவாகிய பை போன்ற உடலை, வினையின்படி கட்டி வைத்து உருவாக்குவதும், பிறவி முடிவில் அவிழ்த்து அழிப்பதும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானே.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #472ல் உள்ளபடி, குழந்தையின் உடலெங்கும் பரவி ஒட்டிக்கொள்ளும் அந்த எட்டுவித சூட்சும காரணிகளாக இருப்பவை, ஐந்து ஞானேந்திரியங்களும்,

  • வரி 2

    மூன்று அந்தக்கரணங்களும் ஆகும்.

  • வரி 3

    இவற்றோடு குழந்தையை ஒட்டியே பிறப்பது வினைப் பயனால் பெற்ற பந்தம் பாசம் எனும் உணர்வுகள். இப்படி எல்லாம் கலந்து உருவாகிய பை போன்ற உடலை,

  • வரி 4

    வினையின்படி கட்டி வைத்து உருவாக்குவதும், பிறவி முடிவில் அவிழ்த்து அழிப்பதும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானே.

திருமந்திரம் பாடல் #473

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout