திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 487

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்முன்புற நாடி நிலத்தின்முன் தோற்றியதொன்புற நாடிநின்று ஓதலு மாமே.

உரை

ஆண் பெண் இருவரும் சந்தித்து இன்பத்தில் உறவாடுகின்றனர். அவர்களின் உறவினால், துன்பத்தையே தரும் பந்தபாசம் என்னும் மாயையால் கட்டப்பட்ட கரு உருவாகி, குழந்தையாகப் பிறந்து உயிராக வளர்கிறது. வளரும் அந்த உயிர் மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால், தன்னை உயிராகப் பிறக்க வைத்த இறைவன் ஒருவன் ஆதிகாலத்திலிருந்தே எப்போதும் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். அவனைத் தேடி அடைய ஆசைப்பட்டு, அவனுடைய திருநாமத்தை (ஓம் நமசிவாய) மந்திரமாக ஓதி தியானத்தில் இருக்க வேண்டும். அப்போது அவனைத் தமக்குள்ளே அறிந்து மாயையிலிருந்து விடுபடலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆண் பெண் இருவரும் சந்தித்து இன்பத்தில் உறவாடுகின்றனர். அவர்களின் உறவினால், துன்பத்தையே தரும் பந்தபாசம் என்னும் மாயையால் கட்டப்பட்ட கரு உருவாகி, குழந்தையாகப் பிறந்து உயிராக வளர்கிறது.

  • வரி 2

    வளரும் அந்த உயிர் மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால், தன்னை உயிராகப் பிறக்க வைத்த இறைவன் ஒருவன் ஆதிகாலத்திலிருந்தே எப்போதும் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும்.

  • வரி 3

    அவனைத் தேடி அடைய ஆசைப்பட்டு, அவனுடைய திருநாமத்தை (ஓம் நமசிவாய) மந்திரமாக ஓதி தியானத்தில் இருக்க வேண்டும்.

  • வரி 4

    அப்போது அவனைத் தமக்குள்ளே அறிந்து மாயையிலிருந்து விடுபடலாம்.

திருமந்திரம் பாடல் #487

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout