சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கிஒத்த இருமாயா கூட்டத் திடைபூட்டிச்சுத்தம தாகுந் துரியம் பிரிவித்துச்சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.
விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே
விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர்எஞ்ஞானம் ஏழ்கோடி மந்திர நாயகர்மெய்ஞ்ஞானர் ஆணவமும் விட்டுநின் றாரே.
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தன்இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.
பெத்தத்தர் சித்தொடு பேண்முத்திச் சித்ததுஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்மத்தத்து மும்மலம் வாடுகை மாட்டாதார்சத்தத்து அமிழ்ந்து சகலத்து ளாரே.
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்நவமான தத்துவம் நாடிக்கண் டாரே.
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே
விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியஅஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனிபுக்கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுபோய்மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.
ஆணவத் துற்ற வவித்தா நனவற்றோர்காணிய விந்துவா நாத சகலாதிஆணவ மாதி அடைந்தோ ரவரன்றேசேணுயர் சத்தி சிவதத்துவ மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #492
1 / 9




