தொடர்ந்து படிக்கread this section continuously
விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியஅஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனிபுக்கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுபோய்மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.
உரைmeaning
விஞ்ஞானர், தமது ஞான கன்மத்தால் எடுத்த அப்பிறவியிலேயே தம் உள்ளமும் மெய்யான இறைவனும் ஒன்றாகக் கலந்து தாமே சிவமாகி இருப்பர். மெய்பிரளய அகலர், அஞ்ஞான கன்மத்தால் ஞானிகளாகப் பிறந்து, பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்குக் காத்திருந்து, அக்காலத்தில் சிவத்தோடு கலப்பர். அஞ்ஞானர், தமது சாதகத்தாலோ அல்லது மெய்பிரளய அகலர்களாக உள்ள ஞானிகளின் துணையாலோ உயர்வதற்கான ஞானம் பெற்று, ஒரு நாள் மெய்பிரளய அகலராகவோ விஞ்ஞானராகவோ மாறி சிவத்தோடு கலப்பர். அசையாத சக்தியாக இருக்கும் இறைவனுடன் கலந்து பேரின்பத்தில் இருக்கும் சிவசாயுச்சியம் என்பது அனைவருக்குமே உறுதியாகக் கிடைக்கும் என்பது உண்மை.
The vinjnanar, in the very birth they take by their wisdom and their deeds, have their hearts merged as one with the true God and are themselves Siva. The mei-piralaya-agalar, born as wise souls through unwise deeds, wait until the age of dissolution to merge with God, and merge with Siva at that time. The agnyanar, gaining through their own striving or through the help of the wise who are mei-piralaya-agalar the wisdom that raises them, one day become mei-piralaya-agalar or vinjnanar and merge with Siva. It is true that Siva-sayujyam, the state of blissful union with God, the unmoving power, is certain to be reached by all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
விஞ்ஞானர், தமது ஞான கன்மத்தால் எடுத்த அப்பிறவியிலேயே தம் உள்ளமும் மெய்யான இறைவனும் ஒன்றாகக் கலந்து தாமே சிவமாகி இருப்பர்.
The vinjnanar, in the very birth they take by their wisdom and their deeds, have their hearts merged as one with the true God and are themselves Siva.
- வரி 2Line 2
மெய்பிரளய அகலர், அஞ்ஞான கன்மத்தால் ஞானிகளாகப் பிறந்து, பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்குக் காத்திருந்து, அக்காலத்தில் சிவத்தோடு கலப்பர்.
The mei-piralaya-agalar, born as wise souls through unwise deeds, wait until the age of dissolution to merge with God, and merge with Siva at that time.
- வரி 3Line 3
அஞ்ஞானர், தமது சாதகத்தாலோ அல்லது மெய்பிரளய அகலர்களாக உள்ள ஞானிகளின் துணையாலோ உயர்வதற்கான ஞானம் பெற்று, ஒரு நாள் மெய்பிரளய அகலராகவோ விஞ்ஞானராகவோ மாறி சிவத்தோடு கலப்பர்.
The agnyanar, gaining through their own striving or through the help of the wise who are mei-piralaya-agalar the wisdom that raises them, one day become mei-piralaya-agalar or vinjnanar and merge with Siva.
- வரி 4Line 4
அசையாத சக்தியாக இருக்கும் இறைவனுடன் கலந்து பேரின்பத்தில் இருக்கும் சிவசாயுச்சியம் என்பது அனைவருக்குமே உறுதியாகக் கிடைக்கும் என்பது உண்மை.
It is true that Siva-sayujyam, the state of blissful union with God, the unmoving power, is certain to be reached by all.
திருமந்திரம் பாடல் #499





