திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 500

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆணவத் துற்ற வவித்தா நனவற்றோர்காணிய விந்துவா நாத சகலாதிஆணவ மாதி அடைந்தோ ரவரன்றேசேணுயர் சத்தி சிவதத்துவ மாமே.

உரை

ஆணவம் முதலான ஐந்து மலங்களும் இருப்பதால், கண்ணால் பார்த்தும் அறியாமையால் அதில் உள்ள உண்மையைத் தெரிந்துகொள்ளாதவர், ஒளி, ஒலி முதலான அனைத்து இறைத் தத்துவங்களையும் உணரமுடியாது. ஆணவம் முதலான ஐந்து மலங்களையும் கடந்தவரே, உயர்வான இடத்தில் இருக்கும் சிவசக்தித் தத்துவத்தை உணரமுடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஆணவம் முதலான ஐந்து மலங்களும் இருப்பதால்,

  • வரி 2

    கண்ணால் பார்த்தும் அறியாமையால் அதில் உள்ள உண்மையைத் தெரிந்துகொள்ளாதவர்,

  • வரி 3

    ஒளி, ஒலி முதலான அனைத்து இறைத் தத்துவங்களையும் உணரமுடியாது.

  • வரி 4

    ஆணவம் முதலான ஐந்து மலங்களையும் கடந்தவரே, உயர்வான இடத்தில் இருக்கும் சிவசக்தித் தத்துவத்தை உணரமுடியும்.

திருமந்திரம் பாடல் #500

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout