திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 501

தொடர்ந்து படிக்கread this section continuously

திலமத் தனைபொன் சிவஞானிக் கீந்தால்பலமுத்தி சித்தி பரபோகம் தரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க் கீந்தால்பலமுமற் றேபர போகங் குன்றுமே.

உரை

உண்மையான அறிவைப் பெற்ற சிவஞானியர்களுக்கு ஓர் எள்ளின் அளவு தங்கத்தைக் கொடுத்தாலும், அதனை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதன் பயனாக முக்தியையும், எண்ணியதை அடையும் சக்தியையும், பேரின்பப் பெருவாழ்விற்கான வழியையும் தந்து அருளுவான். உலக அறிவை மட்டும் கொண்டு தமக்கு ஞானம் இருப்பதாக எண்ணி ஞானியர் போல வேடம் பூண்டிருக்கும் மூடரிடம் இவ்வுலகின் தங்கம் அனைத்தையும் தானமாகக் கொடுத்தாலும் அதனால் ஒரு பயனும் கிடைக்காது; அந்த வீண் தானத்தின் பயனால் அடுத்த பிறவியிலும் பேரின்பப் பெருவாழ்வு கிடைக்காமல் போய்விடும்.

வரி வாரியாக

  • வரி 1

    உண்மையான அறிவைப் பெற்ற சிவஞானியர்களுக்கு ஓர் எள்ளின் அளவு தங்கத்தைக் கொடுத்தாலும்,

  • வரி 2

    அதனை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதன் பயனாக முக்தியையும், எண்ணியதை அடையும் சக்தியையும், பேரின்பப் பெருவாழ்விற்கான வழியையும் தந்து அருளுவான்.

  • வரி 3

    உலக அறிவை மட்டும் கொண்டு தமக்கு ஞானம் இருப்பதாக எண்ணி ஞானியர் போல வேடம் பூண்டிருக்கும் மூடரிடம் இவ்வுலகின் தங்கம் அனைத்தையும் தானமாகக் கொடுத்தாலும் அதனால் ஒரு பயனும் கிடைக்காது.

  • வரி 4

    அந்த வீண் தானத்தின் பயனால் அடுத்த பிறவியிலும் பேரின்பப் பெருவாழ்வு கிடைக்காமல் போய்விடும்.

திருமந்திரம் பாடல் #501

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout