திருமூலர் அருளிய திருமந்திரம்
16. பாத்திரம்

இரண்டாம் தந்திரம் பாடல் 501–504 (4 பாடல்கள்)

திலமத் தனைபொன் சிவஞானிக் கீந்தால்பலமுத்தி சித்தி பரபோகம் தரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க் கீந்தால்பலமுமற் றேபர போகங் குன்றுமே.

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனைநன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்சென்றுஉணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்பொய்விட்டு நானே புரிசடை யானடிநெய்விட்டு இலாத இடிஞ்சிலு மாமே.

ஆவன ஆவ அழிவ அழிவனபோவன போவ புகுவ புகுவனகாவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்ஏவன செய்கின்ற இளங்கிளை யோனே.

திருமந்திரம் பாடல் #501

1 / 4

0:000:00
16. பாத்திரம்பாடல் 501

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout