திருமூலர் அருளிய திருமந்திரம்
17. அபாத்திரம்

இரண்டாம் தந்திரம் பாடல் 505–508 (4 பாடல்கள்)

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்ததுகாலங் கழிந்த பயிரது ஆகுமே.

ஈவது யோக இயம நியமங்கள்சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றிஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்கீவது பெரும்பிழை யென்றுகொள் ளீரே.

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்தோமாறும் ஈசற்குந் தூய குரவற்குங்காமாதி விட்டோர்க்குந் தரல்தந்து கற்றோன்போமா நரகிற் புகான்போதங் கற்கவே.

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்அண்ணல் இவனென்று அஞ்சலி யத்தனாய்எண்ணி இறைஞ்சாதார்க் கீந்த இருவரும்நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

திருமந்திரம் பாடல் #505

1 / 4

0:000:00
17. அபாத்திரம்பாடல் 505

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout