தொடர்ந்து படிக்கread this section continuously
ஈவது யோக இயம நியமங்கள்சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றிஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்கீவது பெரும்பிழை யென்றுகொள் ளீரே.
உரைmeaning
தவமும் யோகமும் செய்து தீய குணங்களைப் போக்கி, நன்மைகளைச் செய்து, அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருக்கும் அடியவர்களுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். வேடம் போட்டுக்கொண்டு நடித்தால் தானம் கிடைக்கும் என்கிற ஆசையில், உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாமல் இருப்பவர்களுக்குத் தானம் கொடுப்பது மிகப்பெரிய தவறு என்று அறிந்துகொள்ளுங்கள்.
Alms should be given only to devotees who have gone through austerity and yoga, banished bad qualities, done good deeds, and hold love toward all living beings. Know that giving alms to those who merely put on a show and act it out, hoping alms will follow, and who hold no real love in their heart, is a very great wrong.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தவமும் யோகமும் செய்து தீய குணங்களைப் போக்கி, நன்மைகளைச் செய்பவர்களுக்கு,
To those who have gone through austerity and yoga, banished bad qualities and done good deeds,
- வரி 2Line 2
அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருக்கும் அடியவர்களுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும்.
and hold love toward all living beings, alms should be given only to such devotees.
- வரி 3Line 3
வேடம் போட்டுக்கொண்டு நடித்தால் தானம் கிடைக்கும் என்கிற ஆசையில் இருப்பவர்களுக்கு,
To those who merely put on a show and act it out, hoping alms will follow,
- வரி 4Line 4
உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாதவர்களுக்குத் தானம் கொடுப்பது மிகப்பெரிய தவறு என்று அறிந்துகொள்ளுங்கள்.
those with no real love in their heart, know that giving alms to them is a very great wrong.
திருமந்திரம் பாடல் #506





