திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 507

இரண்டாம் தந்திரம்17. அபாத்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்தோமாறும் ஈசற்குந் தூய குரவற்குங்காமாதி விட்டோர்க்குந் தரல்தந்து கற்றோன்போமா நரகிற் புகான்போதங் கற்கவே.

உரை

ஒழுக்கத்தில் செல்லும் வழியை அறியாமல் ஐந்து மாபெரும் பாவங்களைச் செய்கின்ற மகா பாவியாக இருந்தாலும், குற்றமில்லாத சிவனடியார்களுக்கும், தூய்மையான சிவஞானத்தைப் போதிக்கும் குருக்களுக்கும், காமம் முதலாய ஐந்து தீய குணங்களைக் கைவிட்ட சிவயோகியர்களுக்கும் தரக்கூடிய தானத்தைத் தந்து, அதன் பயனால் ஞானம் பெற்றுவிட்டால், மகா பாவங்கள் செய்திருந்தாலும் நரகத்திற்குப் போக மாட்டார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    ஒழுக்கத்தில் செல்லும் வழியை அறியாமல் ஐந்து மாபெரும் பாவங்களைச் செய்கின்ற மகா பாவியாக இருந்தாலும்,

  • வரி 2

    குற்றமில்லாத சிவனடியார்களுக்கும் தூய்மையான சிவஞானத்தைப் போதிக்கும் குருக்களுக்கும்,

  • வரி 3

    காமம் முதலாய ஐந்து தீய குணங்களைக் கைவிட்ட சிவயோகியர்களுக்கும் தரக்கூடிய தானத்தைத் தந்து,

  • வரி 4

    அதன் பயனால் ஞானம் பெற்றுவிட்டால், மகா பாவங்கள் செய்திருந்தாலும் நரகத்திற்குப் போக மாட்டார்கள்.

திருமந்திரம் பாடல் #507

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout